தமிழகத்தின் ஆகச்சிறந்த நூல், திருக்குறள் உலகெங்கிலும் பரவி தமிழனின் பெருமை பேசி வருகிறது. உலகளவில் பைபிலுக்கு அடுத்தபடியாக திருக்குறள் தான் அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது தமிழனுக்கு மட்டுமே பெருமையில்லை, ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்குரிய விஷயம். திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும்விதமாக கம்போடியாவில் திருக்குறள் மாநாடு நடந்தேறியது.
இந்த திருக்குறள் மாநாடு செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை நடந்தது. கம்போடிய சுற்றுலா நகரமான சியான் ரீப் நகரில் திருவள்ளுவர் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளுவருக்கு சிலையமைத்து பல உலக நாடுகள் அவருக்கு பெருமை சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடிய தமிழ்சங்கம் சார்பில் இநிகழ்ச்சி ஏற்பாடுச் செய்யப்பட்டு, திருவள்ளுவரின் சிலை திறந்து வக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இம்மாநாடு நடைபெறாமல் இருந்தது. திருக்குறள் மாநாடு நிகழ்ச்சியில் கவியரங்கம், பேச்சரங்கம், ஆய்வரங்கம் போன்றவைகள் சிறப்பாக நடந்தது.