மலேசிய முருகன் சிலைக்கு இணையாக சேலத்திலும் முருகனுக்கு சிலை

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம்

சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன், 78. இவர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 2 ஏக்கரில், உலகில் இதுவரை உயரமான பத்துமலை முருகன் (உயரம் 140 அடி) சிலையை போன்று வடிவமைக்க முடிவு செய்தார். அதற்காக, மலேசியாவில் முருகன் சிலை வடிவமைத்த, திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன், 50, என்பவரை அழைத்து வந்து, உலகில் உயரமான முருகன் சிலையை, 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்து, 2016 செப்., 6ல் பூமி பூஜை போட்டு பணியை தொடங்கினார்.

2018ல், முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது குடும்பத்தினர், முருகன் சிலை அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று காலை, 10:30 மணிக்கு, 146 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. உயரமான முருகன் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது காண்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.