திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records அறிவித்துள்ளது.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய அல்லது படிக்க அல்லது மற்ற ஏதேனும் வேலைக்கு செல்கிற எவருக்கும் ஒரு திங்கட்கிழமையை மிகவும் மோசமான நாளாகவும் விரும்பாத நாளாகும் இருக்கிறது.
சாதனையாளர்களின் உட்சபட்ச கௌரவுமாக கருதப்பட்டும் கின்னஸ் உலக சாதனை தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் பயனர்கள் இதற்கு உங்களுக்கு மிக நீண்ட நேரம் எடுத்துள்ளது இருந்தாலும் நான் இதை ஒப்புக்கொள்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு பயனர் ஒருவரோ “இந்த காரணத்திற்காகவே நான் திங்கட்கிழமை விடுமுறை எடுக்கிறேன்,” மற்றும், “ஞாயிறு மாலையின் அந்த உணர்வு திங்கள் காலை விட மிகவும் மோசமானது” என்று கூறியுள்ளார்.