எழுமின் அமைப்பின் கோவிட்- பாதுகாப்பு தொகுப்பு மருந்தினை அமைச்சர் கே.என்.நேரு தன் தொகுதி மக்களுக்கு இலவசமாக நல்கினார்

கோவிட் 19 நிகழ்வுகள்

வருமுன் காப்பதே நலம். கோவிட் வராமல் தடுப்பதற்கான நால்வகை மருந்துகளை, தி ரைஸ்- எழுமின் அமைப்பின் மக்கள் மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்கள் தேர்வு செய்து கோவிட் பாதுகாப்பு தொகுப்பினை (covid defence kit) தயார் செய்துள்ளார். இந்த சிறப்பான பணியை, மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் வாழ்த்தி துவங்கி வைத்தார். அதுமட்டுமல்லாது தன் தொகுதி மக்களுக்கு இலவசமாக இம்மருந்துகளை விநியோகிக்கவும் எழுமின் அமைப்பை பணித்து, அதற்கான செலவை தானே ஏற்றுள்ளார்.

ரூ.399 மதிப்புடைய இந்த மருந்து தொகுப்பினை எழுமின் அமைப்பு வழியாக வாங்கும்பொழுது ரூ.250 மட்டுமே. இந்த மருந்து தொகுப்பினை பெற விரும்புபவர்கள் எழுமின் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இந்த கோவிட் பாதுகாப்பு மருந்து தொகுப்பினை முன்கள பணியாளர்களுக்கும் வறுமையுற்ற மக்களுக்கும் இலவசமாக வழங்க The Rise- எழுமின் அமைப்பு விரும்புகிறது.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் பொது மக்களைக் காத்திடும் இந்த மருந்தினை இலவசமாக வழங்க, உதவ விரும்புவோர் Info@tamilrise.org என்ற மின்னஞ்சல் மற்றும் https://www.tamilrise.org என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *