யூட்யூப் செயலி தற்போது உலகளவில் மிகவும் பிரபலமான ஓர் செயலியாகும். யூட்யூப் செயலில் நாம் சேனல் உருவாக்கி நம்முடைய வீடியோக்களை பதிவேற்றம் செய்யமுடியும். அதுபோக யூட்யூப் நேரலையும் செய்யமுடியும். இந்த வசதியால் பெரும்பான்மையோர் தங்களுக்கென ஓர் சேனலை உருவாக்கி அதில் வீடியோக்கள், குறுப்படங்கள், நடனம், சமையல் என அனைத்து வகையான நிகழ்வுகளையும் பதிவேற்றம் செய்யமுடியும்.
யூட்யூப்ல் சேனல் தொடங்க எந்தவித கட்டணமும் தேவையில்லை, இலவசமாக சேனலை உருவாக்கமுடியும். வீடியோக்களை பதிவேற்றம் செய்வதால் சேனல் உரிமையாளர்களுக்கு என்ற பயன் என்றால், 1,000 சப்ஸ்க்ரைபர்ஸ் மற்றும் 4,000 மணி நேரம் உங்கள் வீடியோக்களை பார்வையாளர்கள் பார்த்திருக்கும் பட்சத்தில் யூட்யூப் அதற்கான வருவாயை உங்களுக்கு வழங்கும். இச்சேனல்கள் மூலம் பலர் ஆன்லைனில் சம்பாதிக்கிறார்கள்.
நேற்று யூட்யூப் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது என்னவென்றால் சார்ட்ஸ் அதாவது குறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்து அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் அந்த வீடியோக்களை உருவாக்குவோருக்கு 45% வழங்கப்போவதாக யூட்யூப் அறிவித்துள்ளது. பெரிய வீடியோக்கள் மட்டுமே வருவாயைப் பெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பு சேனல் வைத்திருப்போருக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.