பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில்அசீம் வென்றது குறித்து அந்த அறிக்கையில் பல கேள்விகள் உள்ளது. ஜோ மைக்கேல் என்ற யூடியூபர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை தன் twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி முடிந்தாலும் அசீம் வென்றது தவறு என்ற விமர்சனம் உள்ளது. விக்ரமன் வெல்வார் எனக் கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் அசீம் மற்றும் பிக்பாஸுக்கு எதிராக யூட்டியூப்பர் ஜோ மைக்கேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்திருக்கிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிசிசிசி (பிராண்ட் காஸ்ட் கண்டன்ட் கம்பளைண்ட் கவுன்சிலிங்) சான்றிதழ் உள்ளதா? நிகழ்ச்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதா? வெற்றியாளர் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை?என பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அந்த பேப்பரை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.