கனடாவின் அல்பெர்டா மற்றும் சாஸ்கட்ஸ்வான் ஆகிய மாகாணங்களில் ஒரு விசித்திர நோய் மான்களிடையே பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் மான்கள் தங்கள் மூளைக்கட்டுப்பாட்டை இழந்து விசித்திரமாகவும் மூர்க்கத்தனமாகவும் நடந்துகொள்கின்றன. இதானால் இதனை அனைவரும் ஜாம்பி நோய் என்று அழைக்கின்றனர்.
கிரானிக் வேஸ்டிங் டிசீஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது முதன் முதலில் 1960ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதுமுதல் பல்வேறு நாடுகளில் உள்ள மான்களுக்கும் இது பரவி மான்களைக் காவு வாங்கியுள்ளது. இது அனைத்து வகையான மான்களையும் பாரபட்சமின்றி தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வவ்வால்களில் கண்டறியப்பட்ட கொரோனா மனிதர்களுக்குப் பரவியதைப் போல இந்த நோயும் மனிதர்களை பாதித்து விடுமோ என்னும் பீதி மக்களிடையே ஏற்படத் துவங்கியுள்ளது. மான்கறியை உண்பவர்களுக்கும் வேட்டையாடுபவர்களுக்கும் இந்த நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.