தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 6 மாதங்களாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுக் கொண்டார்.இதற்கு முன்பு தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து, கேரள ஆளுநராக இருந்த அர்லேகருக்கு தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
