சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர். ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “கூலி” திரைப்படம். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வாக, இன்று “கூலி” படத்தின் புதிய தகவல்கள் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கூலி திரைப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்தில் உள்ள Chikitu Vibe என்ற பாடலின் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ரஜினிகாந்த் தனது தனித்துவமான ஸ்டைலுடன் நடனம் ஆடியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “அட, நம்ம தலைவர் டான்ஸில் பட்டையை கிளப்புறாரே” எனக் கருத்து தெரிவித்து, சமூக ஊடகங்களில் அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
 
	

 
						 
						