myanmar

மியான்மரில் ராணுவத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் 10 லச்சம் தமிழர்களின் குமுறல்கள்

செய்திகள்

பிப்ரவரி 1, காலை தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால், நாட்டில் என்ன நடக்கிறது? அவர்களது வாழ்க்கை அதலபாதாளத்துக்கு சென்றுவிடுமோ என்று மியான்மர் மக்கள் பரிதவித்தனர். அதே நாள் 12 மணிக்கு தொலை தொடர்பு சேவை படிப்படியாக செயல்பட துவங்கியது.

எது நடக்கக்கூடாது என்று நினைத்தார்களோ, அது நடந்துவிட்டது, ஆம், அவர்கள் சுவாசித்து வந்த சுதந்திர காற்று அடைபட்டுவிட்டது என்று பதறுகிறார் மியான்மரின் யாங்கோன் (ரங்கூன்) நகரைச் சேர்நத ப்ரமிய திரைப்பட இயக்குனரும் தமிழருமான சுந்தர்ராஜ்.

மியான்மரில் 10 லச்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் 3 லச்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாச்சாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

49 ஆண்டுகால இராணுவ ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சொத்துக்கள் முடக்கப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்த நாட்கள் இனி ஒருபோதும் திரும்பக் கூடாது என்றும் ஒவ்வொரு நாளும் மியான்மர் மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குனர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞர் அகத்தியன் கூறுகையில், தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக மியான்மருக்கு வந்து, தங்களை ‘தமிழர்கள்’ என்றும், ‘மியான்மர் குடிமகன்’ என்றும், ‘மியான்மர் தமிழர்கள்’ என்றும் கூறுவதில் பெருமிதம் அடைகின்றனர்.

“ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது. மற்ற இனத்தவர்கள் போலவே தமிழர்களும் எண்ணற்ற பல இன்னல்களுக்கு ஆளானார்கள். குறிப்பாக தமிழர்கள் வசித்து வந்த நிலங்கள், காரணம் ஏதுமின்றி பறிக்கப்பட்டு, ராணுவ ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு என எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு ‘சம உரிமை’ என்ற பேச்சுக்கே இடமில்லை”.

தமிழர்கள் மியான்மரின் குடிமகன்களாகவே அங்கீகரிக்கப்படவில்லை என்பது மோசமான விஷயம். மியான்மரின் குடிமகனுக்கு உரிய சலுகைகளை பெற தேவையான ‘தேசிய அடையாள அட்டை’ 90%க்கும் அதிகமான தமிழர்களுக்கு இன்னமும் கூட கொடுக்கப்படவே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

“மியான்மரில் தமிழர்களை மருத்துவராகவோ, பொறியாளராகவோ, அரசு ஊழியராகவோ பார்ப்பது மிகவும் அரிது. தமிழர்கள் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என கடைநிலை ஊழியராகவே இனமும் நீடிக்கின்றனர். இதற்கு ‘தேசிய அடையாள அட்டை’ இல்லாததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மறுக்கப்படுவது முக்கிய காரணம்”.

மியான்மரின் “அம்மா” ஆங் சாங் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் ராணுவம் அக் கட்சியின் மீது ஆதாரமற்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

மியான்மரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள், அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்காவிட்டால் கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜோ பைடன் நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் பல்வேறு உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் மியான்மர் ராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதிலும் மீடியான்மரில் தயாரிக்கப்படும் மரப் பொருள்களுக்கும், உணவு தானியங்களுக்கும் நல்ல பெயர் உள்ளது. இது தவிர தங்கம் உள்ளிட்ட பலவேறு வளங்களும் இங்குள்ளன. ஆனால் இத்தனை இருந்தும் எங்கள் வாழ்வு வாழ்வா? – சாவா? என்ற நிலையிலேயே தினமும் நகர்கிறது.

‘பர்மா’ என்றழைக்கப்படும் ‘மியான்மர்’, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, வங்கதேசம், லாவோஸ், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்துகொள்கிறது.

இங்கு வாழும் 5.4 கோடி மக்களில் பெரும்பாலானோர் பர்மிய மொழி பேசுபவர்களாக உள்ளனர். ‘யான்கோன்’ மிகப் பெரிய நகரமாக இருந்தாலும் ‘நேபியேட்டோ’ தலைநகரமாக விளங்குகிறது.