சீனாவில் பூமியின் கீழ் செயல்படும் உணவகம் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவின் சோங்கிங் நகரில் பூமியின் கீழ் செயல்படும் உணவகம் உள்ளது. இரண்டாம் உலக போர் காலத்தில் பதுங்கு குழியாக பயன்படுத்தப்பட்ட இந்த இடம் தற்போது உணவகமாக மாறியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் இடமாக இந்த உணவகம் மாறியுள்ளது வெளியில் வெயில் கடுமையாக சுட்டாலும், பதுங்கு குழியில் செயல்படும் உணவகத்தில் குளிர்ந்த சூழல் நிலவுவதால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சோங்கிங் நகரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தும் நிலையில், உணவகத்துக்குள் 77 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலையே நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி குடுப்பதினரின் பிறந்தநாள் விழாவை இந்த உணவகத்திலேயே கொண்டாடி மகிழ்கின்றனர் சோங்கிங் நகர வாசிகள். 520 மீட்டர் நீளம் கொண்ட இந்த உணவகத்தில் வடிக்கையாளர்களுக்காக 280 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோங்கிங் நகரில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

