இந்திய பொருட்களுக்கு மேலதிகமாக 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கிறது. நாளை முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும்.

