தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் மாநில வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் மொத்தம் 436 புதிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தொழில் முதலீட்டுத் துறைக்காக 37 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், தவெக அரசின் நீண்டகால இலக்குகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி பாதைகள் குறித்து முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். ஒவ்வொரு துறையின் தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் விரிவான விவாதம் நடைபெற்றது.தமிழகத்தை எந்த திசையில் முன்னேற்ற வேண்டும், எதிர்கால வளர்ச்சிக்காக எந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதையும் முதலமைச்சர் விஜய் கூட்டத்தில் எடுத்துரைத்தார். மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நோக்கி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

