திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்! கல் தூணில் ஒளிர்ந்த தீபஜோதி

அரசியல் ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இன்று (நவம்பர் 28) மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இன்று மாலை 5 மணியளவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில், கோயில் பட்டர்கள் கல் தூணில் தீபத்தை ஏற்றினர். இந்த நிகழ்வையொட்டி மலைப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி பெற்ற 50 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டது.தீபம் ஏற்றப்பட்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர்.திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகப் போற்றப்படுகிறது. இதனால், இந்த மலைக் கோயிலில் நடைபெறும் ஆன்மிக நிகழ்வுகள் தமிழக மக்களிடையே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *