அமெரிக்காவில் இருந்து 1,700 இந்தியர்கள் நாடு கடத்தல்

அமெரிக்கா அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கருதப்படும் 1,700 இந்தியர்கள், 2026 ஜனவரி முதல் நவம்பர் 25 வரை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், சட்டவிரோத குடியேற்றத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என்றும், அமெரிக்காவுடன் குடியேற்றம் தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ள இந்தியர்களின் தேசிய அடையாளத்தை இந்திய அரசு முதலில் சரிபார்த்த பின்னரே அவர்களைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 3,567 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *