இந்தியாவின் தலைமையில் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உலக பொருளாதாரம், வர்த்தகம், வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது.மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்று தெரிவித்தார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், சர்வதேச அமைப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தெற்குலக நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.

