தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்.

ஆளுமை/விருது செய்திகள் தமிழ்நாடு மறைவு/இரங்கல்

தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் மதுரையில் செப்டம்பர் 11ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 90. கடந்த 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக அவர் ஓய்வில் இருந்து வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். சாலமன் பாப்பையா 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி உள்ளார். தனது நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் எளிமையான அணுகுமுறையால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார். புராணங்கள் மற்றும் இலக்கியங்கள் குறித்து மட்டுமே பேசப்பட்டு வந்த பட்டிமன்றங்களில், சாதாரண மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் பேச வைத்ததில் அவரது பங்கு முக்கியமானது. தமிழ் மொழிக்காகவும், இலக்கியத்திற்காகவும் அவர் ஆற்றிய பணியை பாராட்டி, 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது சீடர்கள், கலைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *