இந்தியாவைச் சேர்ந்த எஸ்சார் குழுமம் அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 18 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலை கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் நேரடி செயல்பாடுகள் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.அமெரிக்காவில் முதலீடுகளை அதிகரிக்க டிரம்ப் நிர்வாகம் பல்வேறு வர்த்தக மற்றும் வரிக் கொள்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், எஸ்சார் குழுமத்தின் இந்த முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த எஃகு ஆலை திட்டம் அமெரிக்காவின் தொழில்துறை வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மற்றும் தொழில் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முதலீடாகவும் இது பார்க்கப்படுகிறது.எஸ்சார் குழுமத்தின் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் இந்திய நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இது அமையும்.

