நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது; படக்குழு அறிவிப்பு

அரசியல் இசை இந்தியா உலகம் கலை / கலாச்சாரம் சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் பொழுதுபோக்கு மலேசியா மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசியல் பரபரப்புக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் சமீகபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூாவ தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜன நாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஜயுடன் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், நரேன் பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜயின் நெருங்கிய நண்பராக ஸ்ரீநாத் இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை கர்நாடக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் தயாரித்துள்ளது, தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாக இருந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நடந்த கரூர் சம்பவம் தொடர்பாக இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் முடக்கிவிட்ட நிலையில், தற்போது பிரச்னைகள் சுமூகமாக முடிந்து, அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளது, இதனால் ஜனநாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான தளபதி கச்சேரி பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து அசத்தியது. அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஒரு துள்ளலான நடனப் பாடலாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்பாடல், வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
படத்தின் பாடல் வீடியோவில், தளபதி விஜய்யின் சிக்னேச்சர் நடனங்கள் மற்றும் அவரது பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் பிரபலமான ஸ்டெப்கள் இடம்பெற்றுள்ளது, ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழத்தியது. இசையமைப்பாளர் அனிருத், தளபதியுடனான தனது இசைக் கூட்டணியில் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்வார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். பாடலின் மெட்டுக்கள், பீட்கள் மற்றும் தாளம் அனைத்தும் விஜய்யின் திரைப்பயணத்தில் இடம்பெற்ற அவரது வர்த்தக முத்திரை (ட்ரேட்மார்க்) நடன அசைவுகளுக்குச் சரியாகப் பொருந்தும் வகையில் மிக சரியாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *