WhatsApp பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய ‘Restricted Chat’ என்ற வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் தங்களது குறிப்பிட்ட தனிப்பட்ட உரையாடல்களை மேலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக முக்கியமான அல்லது ரகசியமான தகவல்கள் அடங்கிய Chat-களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க இந்த அம்சம் உதவும்.‘Restricted Chat’ வசதி செயல்படுத்தப்பட்ட உரையாடல்களில் Media Storage, Chat Export, Meta AI பயன்பாடு மற்றும் Linked Devices போன்ற சில அம்சங்களை பயன்படுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.இதன் மூலம் அந்த உரையாடல்களில் பகிரப்படும் தகவல்கள் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான வாய்ப்பு குறையும். மேலும், தனிப்பட்ட உரையாடல்களின் பாதுகாப்பை அதிகரிக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த புதிய வசதி சோதனை கட்டத்தில் இருப்பதால், அனைத்து WhatsApp பயனர்களுக்கும் உடனடியாக கிடைக்காது. சோதனைகள் முடிந்த பிறகு, எதிர்காலத்தில் அதிகமான பயனர்களுக்கு இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படலாம்.

