மத்திய பிரதேசத்தில் குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால், தேர்தல் முறைக்கேடு குறித்து அதிக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் நகரின் 15வது வார்டில், ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது பை ஒன்றில், சுமார் 400 முதல் 500 வாக்காளர் அடையாள அட்டைகள் மிதந்து வந்தன. அதிகாரிகள் இவை அனைத்தும் உண்மையான வாக்காளர் அடையாள அட்டை என்று உறுதிப்படுத்தினர் மேலும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். அந்த அடையாள அட்டைகள் மக்களுக்கு விநியோகப்பட வேண்டியவை என்றும் ஆனால் இன்னும் தங்கள் கையில் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினனர்.
