வெளிநாட்டு வாகனங்களுக்கு 25% இறக்குமதி வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி.

அமெரிக்கா அரசியல் இந்திய வணிகம் உலகம் செய்திகள் பொருளாதாரம்

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு 25% வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மருந்துப் பொருட்கள், எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்தகட்டமாக கனரக வாகனங்கள் மீது தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பால் வர்த்தக வாகனங்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் இந்திய வாகன ஏற்றுமதிக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும், உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *