அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் (USS) ஒன்றிலிருந்து 30 நிமிடங்களுக்குள் ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் தென்சீனக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. யூஎஸ்எஸ் நிமிட்ஸ் எனப்படும் விமானம் தாங்கி கப்பல் வாஷிங்டன் மாநிலத்தின் கிட்சாப் கடற்படை தளத்துக்கு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது.சுமார் 30 நிமிட இடைவெளியில் நிகழ்ந்த இந்த இரு விபத்துகளில், எம்எச்-60ஆர் ஹெலிகாப்டரில் இருந்த 3 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அதேபோல் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.இரண்டு விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிய அமெரிக்க கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

