திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

அரசியல் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் உள்துறை செயலர் அமுதாவிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மல்ட்டிபிளக்ஸ் ஏசி தியேட்டரில், டிக்கெட் கட்டணத்தை 150 ரூபாயில் இருந்து 250 ஆக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதே போன்று ஏ.சி. இல்லாத மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கில், குறைந்தபட்ச கட்டணத்தை 150 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள ஏ.சி. தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐமேக்ஸில் 450 ரூபாயாகவும், EPIQ தியேட்டரில் 400 ரூபாயாகவும், சாய்வு இருக்கைக் கொண்ட தியேட்டரில் 350 ரூபாயாகவும் கட்டணத்தை உயர்த்த திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், ஏராளமான திரையரங்குகள் மூடும் நிலைக்கு தள்ளப்படும் என்று அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.