மும்பை, தர்மவீர் பகுதியில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பீச் கேண்டி வரையிலான சாலையில் இசைத் தகடுகள் பதித்து உருவாக்கப்பட்டுள்ள மெலோடி சாலையை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் திறந்து வைத்தார். இசைத் தகடுகள் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போதோ அல்லது இந்த சாலையில் 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போதோ இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் “ஜெய் ஹோ” பாடல் வாகன ஓட்டிகளுக்கு குதூகலம் அளிக்கின்றன.
ஹங்கேரி சென்ற இந்திய தொழிலதிபர் அங்குள்ள மெலோடி சாலையை கண்டு வியந்து போய், அதேபோன்று மும்பையில் உருவாக்க விரும்பி உள்ளார். அவரது திட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு அனுமதித்த நிலையில் மும்பையில் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் மெலோடி சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

