இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் முக்கிய அறிவிப்பு!

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆஸ்திரேலியா இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம்

இந்தியாவின் அணுசக்தித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பன்ஸ் அறிவித்துள்ளார். இதற்கான முக்கிய ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.உலகின் மிகப்பெரிய யுரேனியம் வளங்களை கொண்ட நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா, இந்தியாவின் அணுமின் உற்பத்தித் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மின்சாரத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், யுரேனியம் இறக்குமதி அதிகரிப்பது அணுமின் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.தற்போது இந்தியா, அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்கும் நோக்கில் பல புதிய அணுமின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. போதுமான அளவில் யுரேனியம் கிடைத்தால், அணுமின் உற்பத்தி அதிகரிப்பதுடன், நிலக்கரி மற்றும் எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தியின் மீதான சார்பும் குறையும்.மேலும், அணுசக்தி உற்பத்தி குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்டிருப்பதால், இந்தியாவின் பசுமை ஆற்றல் இலக்குகளை அடைவதற்கும் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *