வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்; கேரள அரசு அறிவிப்பு

இந்தியா இயற்கை பேரிடர் இயற்க்கை கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீடுபு பணியில் ஈடுபட்ட வந்தனர்.
கமாண்டன்ட் ஸ்ரீ அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில், மொத்தம் 60 வீரர்களைக் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை ஈடுபட்டு வந்தனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே நிலச்சரிவில் உயிரிழந்த மூவர் மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பிறகே சுரங்கப்பாதைப் பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *