டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் வினாத்தாள் டெலிகிராம் உள்ளிட்ட செயல்களில் கசிந்ததன் காரணமாக நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மீண்டும் நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் உள்ளிட்ட செயலைகளில் கசிந்து விடுவதை தடுக்கவும், வதந்தியான செய்திகள் டெலிகிராம் செயலியில் பரவுவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு ஜூலை 22 வரை டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசின் முடிவால் 15 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் காரியாவின் விடுமுறை கால அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்று கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் விடுமுறை கால அமர்வில் அவசர வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

