வடகொரியா மீண்டும் கடலை நோக்கி குறுகிய தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத தாக்குதலுக்கான புதிய ராணுவ தொழில்நுட்ப சோதனைகளும் இடம்பெற்று வருகின்றன.இந்த நிலையில், வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வொன்சான் நகரில் இருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தென்கொரிய கூட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதன் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

