சூரியனில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுழல்கள்.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் பிரபஞ்சமும் நாமும் விண்வெளி சார்ந்தவை

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள டேனியல் கே. இனோயே (Daniel K. Inouye) சூரிய தொலைநோக்கி, சூரியனின் மேற்பரப்பை இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் துல்லியமாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வில், சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா பகுதியில் சிறிய சுழல் வடிவங்கள் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளன.இந்த சுழல்கள் சூரியனின் காந்தப்புலத்தில் ஆற்றலை கடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனா ஏன் அதிக வெப்பமாக உள்ளது என்ற நீண்டகால அறிவியல் புதிருக்கும் பதில் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.மேலும், இந்த ஆய்வு சூரிய வெடிப்புகள் (Solar Flares) மற்றும் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் போன்ற சக்திவாய்ந்த நிகழ்வுகள் எப்படி உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும். இதன் மூலம் பூமியில் செயற்கைக்கோள்கள், ஜிபிஎஸ், தகவல் தொடர்பு மற்றும் மின்சார அமைப்புகளை பாதிக்கும் விண்வெளி வானிலையை முன்கூட்டியே கணிக்கவும் இந்த கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *