தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை இருந்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், அதிக அளவில் வட்டி செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:
தாய்மாமன் தங்க மோதிரம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு.
மாணவர்களுக்கு நவீன சைக்கிள்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் நவீன சைக்கிள்கள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு.
பெண்களுக்கு அண்ணன் சீர்: திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி ஒதுக்கீடு.தாய் கேர் மையங்கள்: கர்ப்பிணிகளுக்கு இலவச உணவு, மருத்துவ உதவி மற்றும் தொடர் கண்காணிப்பு வசதிகளுடன் சேவை மையங்கள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு.
வெற்றி மகளிர் ஆடுகள் திட்டம்: கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு.
மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்: நூலகம், யோகா, தியானம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்படும்.
கறவை மாடுகள் திட்டம்: ஆண்டுதோறும் 10,000 தகுதியான பெண்களுக்கு இலவசமாக கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கீடு.
நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்: தமிழகம் முழுவதும் 1,000 மையங்கள் அமைத்து, கிராமங்களுக்கே சென்று இலவச பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்க ரூ.33 கோடி ஒதுக்கீடு.

