தமிழகத்தில் கோடை கால அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது; வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

இந்தியா இயற்க்கை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை வினோதங்கள்

அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் வெயில் கொளுத்தும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், வேலூரில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நீண்ட கால அறிக்கையின்படி, இந்தியாவில் 11 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூரிய வெப்பம் பூமியில் விழந்து வெளியேற முடியாமல் தரைப்பகுதியில் நிலை கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. கடந்த 150 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது. கடந்த 1877ம் ஆண்டில் நாட்டில் சூப்பர் எல்-நினோ ஏற்பட்டதால் 21 மாதங்கள் வெப்பம் நீடித்தது. அதேபோன்ற நிலை தற்போதும் உருவாகியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து 113 டிகிரி வரை வெ யில் கொளுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 11 மணி முதல் மாலையில் 4 மணி வரையில் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து வீசிய காற்றின் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாலை மாவட்டங்கள் தொடங்கி தெற்கு கர்நாடகா வரையில் உள்ள பகுதிகள், தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்துள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் தெ ாடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். மேலும், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல்களில் இரு வளி மண்டல காற்று சுழற்சி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இலங்கை பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரையை கடந்து மேற்கு நோக்கி பயணித்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும் என்பதால் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியதால் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *