டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் தயாரிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி வங்கிக் கணக்குகள், பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளை விரைவாக முடக்கவும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டிஜிட்டல் மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.அனைத்து மாநிலங்களிலும் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து, இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர். நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் கைது மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.மேலும், டிஜிட்டல் மோசடி தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள், மத்திய அரசு மற்றும் சிபிஐ செப்டம்பர் 16-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

