டெல்லியில் மோடி – புதின் சந்திப்பு! இந்தியா – ரஷ்யா உறவில் முக்கிய பேச்சுவார்த்தை

அரசியல் இந்தியா உலகம் செய்திகள் பொருளாதாரம் ரஷ்யா

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார். இருதரப்பு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா வந்துள்ள புதினை, பிரதமர் மோடி நேரில் வரவேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கினார். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்த பரிசு அமைந்துள்ளது. மோடி – புதின் சந்திப்பில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மேலும், ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கான எரிசக்தி விநியோகம், பாதுகாப்புத் துறையில் நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
இந்த சந்திப்பு இந்தியா–ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்புக்கான புதிய முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *