தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது உறுப்பினர்களுக்கு எளிதான சேவைகளை வழங்க பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை யுபிஐ (UPI) மூலம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.இதற்காக புதிய செயலி ஒன்றையும் EPFO அறிமுகம் செய்ய உள்ளது. இந்தச் செயலி மூலம் உறுப்பினர்கள் தங்களது பிஎப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75 சதவீதம் வரை பணத்தை யுபிஐ வழியாகத் தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பிஎப் பணத்தை எடுக்க உறுப்பினர்கள் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. புதிய வசதி அறிமுகமானால், பணத்தை எடுக்கும் நடைமுறை மேலும் எளிதாகவும் விரைவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த யுபிஐ வசதி வரும் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வசதியின் தொடக்கத் தேதி, பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் செயல்படும் முறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை EPFO வெளியிட்ட பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

