இங்கிலாந்து லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இங்கிலாந்தில் “லியோ” திரைப்படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியிடப்படுகிறது. ரிலீசுக்கு 42 நாட்கள் முன்னதாக டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், 10 ஆயிரத்திற்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2023-ல் இதே நிறுவனம் ரிலீஸ் செய்த வாரிசு திரைப்படத்திற்கான முன்பதிவின் போது முதல் 24 மணிநேரத்தில் சுமார் 2 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆனது.
முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது.
பீஸ்ட் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் அதிக வசூலையும் பெற்றது. இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட “வாரிசு” அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் நடிகர் விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி சாதனை படைத்தது.