தமிழகத்தின் கடல்சார் வளர்ச்சிக்கு ₹9,618 கோடி நிதி! மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

செய்திகள்

தமிழ்நாட்டில் கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசிடம் ₹9,618 கோடி நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிதியின் மூலம் பல முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அதில், சென்னை – புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவது, ராமேஸ்வரம் – இலங்கை இடையே கடல் வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத பக்கிங்ஹாம் கால்வாயை மீண்டும் சீரமைப்பது மற்றும் கடலூரில் புதிய துறைமுகம் அமைப்பது போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், கடல்சார் சுற்றுலா, சரக்குப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகலாம்.குறிப்பாக, ராமேஸ்வரம் – இலங்கை இடையிலான கடல் போக்குவரத்து திட்டம் நடைமுறைக்கு வந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *