சாகித்ய அகாடமியின் 2023ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் உதயசங்கருக்கும், யுவ புரஸ்கார் எழுத்தாளர் ராம்தங்கத்திற்கும் கிடைத்துள்ளது

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதியுள்ளார். கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். திருக்கார்த்தியல் சிறுகதைக்கு எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளதாக ராம்தங்கம் தெரிவித்துள்ளார். 2019ல் வெளிவந்த திருக்கார்த்தியல் சிறுகதை இதுவரை 6 விருதுகளை பெற்றுள்ளது. குழந்தை தொழிலாளர்களின் உலகம் உள்ளிட்டவை பற்றி எழுதப்பட்ட திருக்கார்த்தியல் கதைக்கு விருது அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி நாகர்கோவிலை சேர்ந்த எழுத்தாளர் ராம்தங்கம் ராஜவனம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *