லடாக்கில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 விமானிகள் மற்றும் ராணுவ அதிகாரி சச்சின் மேத்தா காயமடைந்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து நடந்த உடனே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது காயமடைந்த விமானிகள் மற்றும் அதிகாரி சச்சின் மேத்தா அனைவரும் நலமாக உள்ளனர் என்றும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

