அண்ணா சாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம்! முதல்வர் விஜய் ஆய்வு

செய்திகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மின்தடை ஏற்படும் நேரங்களில் பொதுமக்களுக்கு விரைவாக மின்சாரம் வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும், மின்னகம் மற்றும் மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தையும் முதல்வர் ஆய்வு செய்து, மின் விநியோகம் மற்றும் மின் தடைகளை கண்காணிக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, அதிக மின் தேவை ஏற்படும் நேரங்களில் மின் விநியோகத்தை சீராக பராமரிப்பது, பழுதுகளை விரைந்து சரிசெய்வது மற்றும் பொதுமக்களின் மின்சார புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்குவது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *