ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2025: போலந்து வீரங்கனை மேடிசன் கீஸ், அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்

ஆஸ்திரேலியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றில் போலந்து வீரங்கனை மேடிசன் கீஸ், அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி சுற்று நடைபெற்றது.
அதில் முன்னணி வீரங்கனையான அரினா சபலென்கா, போலந்து வீரங்கனை மேடிசன் கீஸ் உடன் மோதினார் .இதில் முதல் செட்டை மேடிசனும் 2-வது செட்டை சபலென்காவும் கைப்பற்றினர். யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இதில் மேடிசன் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனால் 3-6, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *