கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அப்போது முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் சமரச முடிவாக சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்வராகவும் நியமித்தது. மேலும் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிப்பார்கள் என்ற அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது.இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ஜூன் 3-ம் தேதி மாலை 5.15 மணிக்கு டி.கே. சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

