திரையரங்குகளில் வெளியானது. நீண்ட கால உழைப்புக்குப் பிறகு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர் படத்தின் கதை, நடிப்பு மற்றும் உருவாக்கத்தை பாராட்டி வரும் நிலையில், சிலர் படத்தின் குறைகளை சுட்டிக்காட்டியும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகள் குறித்து நடிகர் நானி தனது சமூக வலைதளப் பதிவில் பதிலளித்துள்ளார். ரசிகர்களின் அனைத்து எதிர்வினைகளையும் கருத்துகளையும் கவனித்ததாகவும், அவர்கள் காட்டிய அன்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் நானி தெரிவித்துள்ளார். அதேபோல், ரசிகர்கள் செய்த நகைச்சுவையான ட்ரோல்களையும் தான் ரசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் ‘தி பாரடைஸ்’ படத்தை தங்களுடைய சொந்தப் படமாக ஏற்றுக்கொண்ட விதம் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகவும், விமர்சகர்கள் கூறிய குறைகளில் இருந்தும் தான் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில், படக்குழுவினர் மிகுந்த உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் இப்படத்தை உருவாக்கியதாக கூறிய நானி, படத்தை கொண்டாடுவதும் விமர்சிப்பதும் ரசிகர்களின் விருப்பம் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

