நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடாது என்று அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக கூறினார். தேர்தல் என்பது அரசியலின் ஒரு பகுதி மட்டுமே, இது தியாகம் அல்ல கடமை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.தொகுதி ஒதுக்கீடு மற்றும் சின்னம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கட்சிக்கு திருப்திகரமாக இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே சமயம், கட்சியின் “டார்ச்” சின்னம் தொண்டர்களின் உணர்வுடன் இணைந்தது என்பதால் அதை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் கூறினார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் எனவும், மக்களுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

