காமன்வெல்த் போட்டி மகளிர் ஜூடோ பிரிவில் முதல் முறியாக இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.
ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை ‘அஷ்மிதா டே’ தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
23 வயதான அஸ்மிதா டே, மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில், கனடாவின் குவாச் -ஐ வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோ பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கணை என்ற வரலாற்று சாதனையை படைத்தார் அஷ்மிதா.
அதேபோல, 60 கிலோ ஆடவர் ஜுடோ ஆட்டத்தில் இஇந்தியாவின் ஹர்ஷ் சிங், 10- 0 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ஸை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

