2025 மே மாதம் முதல் ராமர் கோயிலில் நன்கொடை பணம் முறைகேடாக திருடப்பட்டு வந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணையில் வெளியாகியுள்ளது. தினமும் ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரை நன்கொடை பணம் திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.முன்னதாக கோயிலில் தினசரி ரூ.16 முதல் ரூ.18 லட்சம் வரை மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு தினசரி டெபாசிட் தொகை ரூ.24 முதல் ரூ.26 லட்சமாக உயர்ந்துள்ளது. இது விசாரணையில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர் சமீபத்தில் புதிய வீடுகள் கட்டியதும், கார்கள் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாத சம்பளம் வெறும் ரூ.15,000 மட்டுமே என்பதால், வருமானத்தை மீறிய சொத்து சேர்ப்பு குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

