பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 4வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வீடியோ viral

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் படத்திற்கு “ஸ்வீட் ஹார்ட்” என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை சினிமா சின்னத்திரை

“யுவன்” தயாரிப்பில் “ரியோ” !

https://youtu.be/tz5AEgix7C8?si=ZnhKOaa77QVTk29j

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்து வரும் புதிய திரைப்படம் “ஸ்வீட் ஹார்ட்” (SWEET HEART). இப்படத்தில் ரியோ ராஜ் கதா நாயகனாக நடிக்க உள்ளார்.கதை இயக்கம் சுகுமார். படத்தலைப்பு தொடர்பான அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகியுள்ளது.


“கனா காணும் காலங்கள்” என்ற தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ரியோ ராஜ், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவர் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார், குறிப்பாக “ரெடி ஸ்டெடி போ”, “ஜோடி நம்பர் ஒன்” மற்றும் “சரவணன் மீனாட்சி” மற்றும் விக்ரம் பிரபு நடித்த கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “சத்திரியன்” திரைப்படத்தில் ரியோ ராஜ் துணை வேடத்தில் நடித்தார்.


அதன்பிறகு, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”, “ப்ளான் பண்ணி பண்ணனும்”, “ஜோ” போன்ற படங்களில் ஹீரோவாக புது அவதாரம் எடுத்து நடித்து தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு மற்றும் இசையில், ரியோ ராஜ் கதா நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படம், “ஸ்வீட் ஹார்ட்.


யுவன் தயாரிப்பில் ‘பியார் பிரேம காதல்’ மற்றும் ‘மாமனிதன்’ போன்ற படங்கள் வெளிவந்துள்ளது.இதன் வரிசையில் ஸ்வீட் ஹார்ட் படமும் இணைந்து உள்ளது.


இப்படத்தின் அறிவிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளனர்.மற்றும் படத்தின் நடிகர்கள் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் உள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் பாலாஹி சுப்ரமணியம் மற்றும் எடிட்டர் தமிழ் அரசன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *