ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிட கோலால் இந்திய அணி டிரா செய்தது. பாரிஸில் நடைபெற்று வரும் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இரண்டாவது லீக் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே பந்து இந்திய அணியின் வசமே இருந்தாலும், இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் செய்த சிறு தவறால் அர்ஜென்டினா அணி 23 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலைப் பெற்றது.
அதற்குப் பிறகு அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை அந்த அணி வீணடித்தது. கடைசி நிமிடத்தில் இந்திய அணிக்கு 4 பெனால்டிக் கார்னர் வாய்ப்பு கிடைத்த நிலையில், கேப்டன் ஹர்மன்பீர்த் சிங் கோல் அடிக்க ஆட்டம் டிரா ஆனது.