மகாபாரதம் திரைபடத்தில் நானி நடிக்கிறார்; உறுதி செய்த இயக்குநர் ராஜமௌலி

இசை இந்தியா சினிமா சின்னத்திரை செய்திகள் நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’ என்ற பான் இந்தியா படத்தை சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இதில் ‘கேஜிஎஃப்’ படத்தின் 2 பாகங்களிலும் யஷ் ஜோடியாக நடித்தவரும், தமிழில் ‘கோப்ரா’ என்ற படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவருமான ஸ்ரீநிதி ஷெட்டி நானி ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராவ் ரமேஷ், பிரம்மாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். சானு ஜானி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, மிக்கி ஜே மேயர் இசை அமைத்துள்ளார்.மே 1ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தின் தமிழ் பதிப்பை சினிமாக்காரன் பட நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் பான் வேர்ல்ட் படத்துக்கு பிறகு தான் இயக்க திட்டமிட்டுள்ள ‘மகாபாரதம்’ என்ற மிகப் பிரமாண்டமான படத்தில் நானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், தற்போது அவரை மட்டுமே ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *