கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை இதுவரை இல்லாத வகையில், ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 10 ரூபாய் அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது என்றார். எனவே, இதுவரை இல்லாத வகையில், கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 315 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம், 5 கோடி கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலையில் பணியாற்றும் 5 லட்சம் ஊழியர்களும் பயன் அடைவார்கள் என்று அனுராக் தாக்கூர் சுட்டிக்காட்டினார். மேலும் தேசிய ஆராய்ச்சி மைய மசோதாவை நாடாளுமன்றத்தை அறிமுகம் செய்யவும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கூறினார்.
பின்னர் பேசிய, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உலகிலேயே முதன் முறையாக இந்தியாவில் நேனோ உரம் தயாரிக்கப்படும் என்றார்.விவசாயிகளின் நலன்களுக்காக 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
